உடுமலைப்பேட்டை
உடுமலை நகராட்சி 23வது வார்டில் நகராட்சி ஊழியர்கள் அலட்சியம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி 23வது வார்டு சங்கிலி வீதியில் சாக்கடை கால்வாய் பணி முடிந்த பிறகு அந்த கழிவுகள், கற்கள், குப்பைகள் சாலையின் இருபுறமும் கொட்டி தேங்கி மழைகாலங்களில் மிகுந்த சிரமப்பட வேண்டிய சூழல் உள்ளது. துர்நாற்றம், கொசு, சுகாதார சீர்கேடு உள்ளதால், மழை வந்தால் போதும் 2 முதல் 3 நாட்கள் மழை நீருடன் சாக்கடை கழிவு நீர் சென்று கொண்டே இருக்கும். குடிநீர் குழாயில் கழிவு நீரும் கலக்கும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.