பல்லடம் - Palladam

பல்லடத்தில் மூட்டை மூட்டையாக குட்கா; ஒருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய சரகத்திக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெற்று வருவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து சித்தம்பலம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சாந்தி கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையிக் பல்லடம் சேடப்பாளையத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் குட்காவை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. கர்நாடகாவில் இருந்து குட்காவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து 400 கிலோ குட்காவை பறிமுதல் செய்த பல்லடம் போலீசார் பிரேம்குமாரை கைது செய்து சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా