அனைவருக்கும் வீடு திட்டத்தில் 30 பயனாளிகளுக்கு ஆணை.
போளூர் |

அனைவருக்கும் வீடு திட்டத்தில் 30 பயனாளிகளுக்கு ஆணை.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 30 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணைகளை பேரூராட்சி செயல் அலுவலர் யூ. முகம்மம்ரிஜ்வான் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 30 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணைகள் வழங்கும் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் ச. ராணிசண்முகம் தலைமை தாங்கினார். துணை தலைவர் ந. சாந்திநடராஜன் முன்னிலை வகித்தார். முதுநிலை எழுத்தர் அ. முகம்மத்இஸ்ஹாக் வரவேற்றார். செயல்அலுவலர் யூ. முகம்மத்ரிஜ்வான் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 30 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கி பேசுகையில், இந்த வீடு கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு சார்பில் ₹2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் கட்டி கொள்ள இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதுவரை போளூர் பேரூராட்சியில் 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பேரூராட்சி பகுதியில் ெபாருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்கள் இந்த திட்டத்தைபயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார். இதில் மன்ற உறுப்பினர்கள் த. அமுதாதனசேகரன், ஜெ. பழனி, எ. எஸ். ஹயாத்பாஷா, கி. மல்லிகாகிருஷ்ணமூர்த்தி, செ. சிவசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு