சிவகாசி |

விருதுநகர் மார்க்கெட் நிலவரம்

*விருதுநகர் சந்தை: கடலை எண்ணெய், வத்தல் விலை குறைவு: துவரம் பருப்பு , பாசிப்பயறு விலை உயர்வு. * விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய், பாமாயில் மற்றும் குண்டூர் வத்தல் விலை குறைந்தது. அதேவேளை துவரும் பருப்பு, பாசிப் பயறு ஆகியவற்றின் விலையானது உயர்ந்து காணப்பட்டது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன் விபரம் வருமாறு: கடலை எண்ணெய் 15 கிலோ கடந்த வாரம் ரூ. 2800 என விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ. 20 குறைந்துள்ளது. எனவே, ரூ. 2780 என விற்பனையாகிறது. பாமாயில் கடந்த வாரம் 15 கிலோ ரூ. 1375 என விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ. 5 குறைந்துள்ளது. எனவே, டின் ஒன்று ரூ. 1370 என விற்பனை செய்யப்படுகிறது. குண்டூர் வத்தல் 100 கிலோ கடந்த வாரம் ரூ. 18ஆயிரம் முதல் 20 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2ஆயிரம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, ரூ. 16ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. துவரம் பருப்பு புதுசு நாடு வகை 100 கிலோ ரூ. 12ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ. 100 வரை உயர்த்தப்பட்டு ரூ. 12, 100க்கு விற்பனையாகிறது.

வீடியோஸ்


தமிழ் நாடு
'எங்கள் பூரணம் அம்மா' - அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி!
Jan 26, 2024, 09:01 IST/

'எங்கள் பூரணம் அம்மா' - அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி!

Jan 26, 2024, 09:01 IST
அரசுப் பள்ளி கட்டுவதற்காக தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு, சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் பூரணம் அம்மாளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அன்பில் மகேஷ், 'கல்வி எனும் அறத்தின் வழியே ஒன்றிணைந்தோம். கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம். எங்கள் பூரணம் அம்மா' என குறிப்பிட்டுள்ளார்.