
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 15 மீனவர்கள்
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை புரிந்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் தலா ரூ.50,000 அபராதம் விதித்த நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. மீனவர்கள் கொழும்பு நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை வந்த 15 மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று ராமேஸ்வரம் அனுப்பி வைத்தனர்.