
எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று EPS போடும் கணக்கும் சரியாக இருக்கும்
எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று இபிஎஸ் போடும் கணக்கும் சரியாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் பேசினார். அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “கணக்கு கேட்டு ஆரம்பித்த கட்சி தான் அதிமுக, இப்போது தப்பு கணக்கு போடுகிறீர்கள்" என கூறினார். அதற்கு பதிலளித்த வேலுமணி, "கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக இருக்கும். எங்களை எல்லாம் ஆளாக்கிய ஜெயலலிதாவை என்றைக்கும் மறக்க மாட்டோம்" என்றார்.