
வயிற்றில் இருந்து 300 ரூபாய் காசுகள் அகற்றம்
ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூரில் நபர் ஒருவரின் வயிற்றில் இருந்து ரூ.300 மதிப்புள்ள நாணயங்கள் அகற்றப்பட்டுள்ளன. 33 வயதான அந்த நபர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்ததில் அவரது வயிற்றில் நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர், ரூ1, ரூ.2, ரூ.10, ரூ.20 நாணயங்கள் அகற்றப்பட்டன. இது சவாலான சிகிச்சையாக இருந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.