பாபநாசம் |

வீட்டு மாடியில் கேஸ் சிலிண்டர் வெடித்து பொருட்கள் சேதம்

சுவாமிமலையில் உள்ள சர்வமானிய தெருவில் உள்ள முராரி காலனியில் வசிப்பவர் ராமானுஜம் மனைவி திலகவதி வயது (60). இவர் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அதற்கு முன்பு வீட்டின் கீழ் பகுதியை காலி செய்து மாடியில் தகர கொட்டகை அமைத்து பொருட்களை வைத்து விட்டு சென்றார். நேற்று மதியம் திடீரரென்று திலகவதியின் வீட்டு மாடியில் தீ விபத்து ஏற்பட்டு வெடிப்பதுபோல் சத்தம் கேட்டது. இந்த தீ விபத்து நடைபெற்ற இடத்திற்கு திமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் பேரூராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி பேரூராட்சி மன்ற உறுப்பினர் குணாளன் உள்ளிடட பொதுமக்கள் பார்த்த போது மாடியில் தீ பிடித்துத் எரித்து. கொண்டிருந்தது அக்கம்பக்க மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார் தகவல் சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளர் மலைச்சாமி, கும்பகோணம் தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணி ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு போலீசார் , தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வீட்டை பார்த்த போது வீட்டிலிருந்த ஒரு சிலிண்டர் வெடித்திருந்தது, மற்ற பொருட்கள் கருகிய நிலையில் இருந்தது. எப்படி சிலிண்டர் வெடித்து என்று சுவாமி மலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன், உதவியாளர் சீனிவாசன் சேதமதிப்புகளை கணக்கெடுத்தனர். வீட்டில் ஆட்கள் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு