நடிகை மியா கலிஃபாவின் புகைப்படத்தை பார்த்து 'கர்வா சௌத்' விரதத்தை துறந்த முதியவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கணவரின் ஆயுள் நீடிக்க வேண்டும் என்பதற்காக மனைவி விரதம் இருந்து, நிலவொளியில் சல்லடை மூலம் கணவரின் முகத்தை பார்ப்பதே இந்த விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பீகாரைச் சேர்ந்த முதியவர், சடங்கின் போது தனது திருமண துணையின் புகைப்படத்தை முன் வைப்பதற்கு பதிலாக, மியா கலீஃபாவின் புகைப்படத்தை வைத்து விரதத்தை துறந்துள்ளார்.