
கோவை: நடுரோட்டில் முத்தமழை பொழிந்த வாலிபர்..
கோவை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 30) நடுரோட்டில் வாலிபர் ஒருவர் வலுக்கட்டாயமாக கல்லூரி மாணவியை விரட்டிச்சென்று முத்தம் கொடுத்துள்ளார். பாலக்காடு சாலையில் கல்லூரி மாணவி பயணித்த ஸ்கூட்டர் முகமது ஷெரீப் என்பவரின் பைக் மீது மோதியுள்ளது. இதற்காக கல்லூரி மாணவி மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார், இருப்பினும் முகமது ஷெரீப் விரட்டிச் சென்று அந்த மாணவிக்கு முத்தம் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.