திருப்பூர் - Tirupur

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருப்பூர்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 7 கடைகளுக்கு ரூ. 7 லட்சம் அபராதம் திருப்பூர் அரிசி கடை வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில் மாநகர நல அலுவலர் கௌரி சரவணன் தலைமையிலான குழுவினர் அரிசி கடை வீதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 7 கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கடைகளுக்கு தலா 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 7லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடை சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా