விழுப்புரம்
குடிபழக்கத்தைக் கண்டித்ததால் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை.
விழுப்புரம், வண்டிமேட்டை சேர்ந்தவர் ஏழுமலை மகன் விவேக், 25; குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டில்இருந்தார். அதனை அவரது தாய் சாந்தா நேற்று முன்தினம் கண்டித்தார். அதில் மனமுடைந்த விவேக் வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.