சென்னை: கும்மிடிப்பூண்டி திமுக முன்னாள் எம்எல்ஏ வேணுவின் இல்லத்திருமண நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(அக்.23) கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், மணமகனின் பெயர் ஸ்டாலின், என்னுடைய பெயர். அப்படி செல்வதைவிட ரஷ்ய அதிபராக இருந்த ஸ்டாலின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என கூறலாம். ஆனால் மணமகளின் பெயரைக் கேட்டால் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. அதில் தவறு ஏதுமில்லை. ஆனால் உங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு அழகான தமிழ்ப் பெயரை சூட்டுங்கள் என்றார்.