ஒரு நாளுக்கு 100 போன் கால்! மனைவிக்கு தெரியவந்த உண்மை
ஜப்பானைச் சேர்ந்த நபர், ஒரு நாளைக்கு 100 முறை தனது மனைவிக்கு வெவ்வேறு எண்களில் இருந்து அழைப்பதும், அழைப்பை ஏற்றதும் பேசாமல் துண்டிப்பதுமாக இருந்துள்ளார். இதனால் குழம்பிய பெண், போலீசில் புகாரளித்தார். விசாரணையில், மனைவிக்கு தினமும் 100 முறை போன் செய்ததை கணவர் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் கூறும்போது, தன் மனைவியை அதிகமாக காதலிப்பதாகவும், அதன் காரணமாக இப்படி செய்ததாகவும் கூறி அனைவரையும் அதிர வைத்தார்.