கன்னியாகுமரி - Kanyakumari

தூய யூதா ததேயு திருத்தல குடும்ப விழா
விளவங்கோடு |

தூய யூதா ததேயு திருத்தல குடும்ப விழா

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார் மடம் தூய யூதா ததேயு திருத்தல குடும்ப விழா கடந்த 22 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது, தினசரி புனிதர் புகழ் மாலை, அருளுரை , திருப்பலி ஒப்புரவு, அருள் சாதனம் வழங்குதல், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து சிந்தனை சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. எட்டாம் நாள் முட்டைக்காடு பங்கு பணியாளர் மனோக்கியம் சேவியர் மறையுரையும், உசிலம்பட்டி பங்கு பணியாளர் மைக்கிள் தலைமையில் திருப்பலியும் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் வட்டம் பங்குபணியாளர் சகாய தாஸ் மறையுரையும் , வலங்கைமான் பங்கு பணியாளர் ஆல்பர்ட் தலைமையில் திருப்பலியும் நடைபெறுகிறது. புனித யூதா ததேயு திருத்தலத்தின் சார்பில் பெரிய அலங்கார தேர் பவனியும் நடைபெறுகிறது , நிறைவு நாளன்று தமிழ் மாநில கார்மல் சபை தலைவர் ஜெயராஜ் மறையுரையும் , ஆடம்பர கூட்டு திருப்பலியும் நிறைவேற்றுகிறார், அதன் பின்னர் திரு கொடி இறக்குதல், சமபந்தி விருந்து , நன்றி வழிபாடு, புத்தாண்டு திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது, இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ராயப்பன் தலைமையில் கார்மல் நகர் அருட் பணியாளர்கள் அருட்பணி பேரவையினர், இறை மக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

வீடியோஸ்