பாதாள செம்பு முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
நிலக்கோட்டை |

பாதாள செம்பு முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

திண்டுக்கல் மாவட்டம் கட்டசின்னாம்பட்டி கிராம மக்கள் விரதம் இருந்து 60க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக வந்து பாதாள செம்பு முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். வைகாசி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கட்டசின்னாம்பட்டி கிராம மக்கள் ஒரு வார காலம் விரதம் இருந்தனர். காப்பு கட்டி இன்று 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தீர்த்த குடங்களுடன் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து இராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். கட்டசின்னாம்பட்டி ஊர் முக்கியஸ்தர்களுக்கு பாதாள செம்பு முருகன் கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பாதாள செம்பு முருகன் கோவில் நிர்வாகம் சார்பாக கட்டசின்னாம்பட்டி கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

வீடியோஸ்