ஜெர்மனியில் Number 40 என்ற பெயரில் பீட்சாவின் ஒவ்வொரு துண்டுகளுக்கும் கீழ் ஒரு பாக்கெட் கொக்கைன் போதைப்பொருளை மறைத்து விற்பனை செய்த உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். Number 40 பீட்சாவின் விற்பனை அப்பகுதியில் அமோகமாக நடந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், அதன் மூலப்பொருட்களை ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, போலீசார் பீட்சா உரிமையாளரை கைது செய்துள்ளனர்.