5 ஆண்டுகளுக்குப் பின் சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

81பார்த்தது
5 ஆண்டுகளுக்குப் பின் சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
ரஷ்யாவின் கசான் நகரில் 16ஆவது பிரிக்ஸ் மாநாடு நடந்துவருகிறது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பின்போது 'இந்தியா - சீன உறவு என்பது நம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, உலகின் அமைதிக்கும் மிக முக்கியமானது' என மோடி தெரிவித்தார். இருநாட்டு தலைவர்களும் 2019ஆம் ஆண்டுக்குப் பின் கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி