திருப்பூர் மாநகராட்சி - Tiruppur Municipal Corporation

கொரோனா வைரஸ் அப்டேட்
சென்னையில் இருந்து வருவோர் பற்றி தகவல் தெரிவிக்க தொடர் அழைப்புகள்!

சென்னையில் இருந்து வருவோர் பற்றி தகவல் தெரிவிக்க தொடர் அழைப்புகள்!

திருப்பூர் மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் குறித்து தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரே நாளில் 34 அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் குறிப்பாக சென்னையில் இருந்து யாராவது வந்தால் பொதுமக்கள் 0421-2971199, 0421-2971133 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதன்படி வெளியூர்களில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்குள் நுழைந்தவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று ஒரே நாளில் 34 அழைப்புகள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.