
மூலனூர்: ரேஷன் கடை கட்டுவதற்கு பிரகாஷ் எம்பி அடிக்கல் நாட்டு விழா
மூலனூர் பேரூராட்சியில் உள்ள மூவேந்தர் நகரில் புதிய பகுதி நேர ரேஷன் கடை கட்டிடப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பிரகாஷ் எம்.பி. கலந்து கொண்டு கட்டிட பணியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பிரகாஷ் எம்.பி. சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பொது மக்களை சந்தித்து தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அனைத்து கிராமங்களிலும் வரவேற்பு அளித்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல. பத்மநாபன், மூலனூர் கிழக்கு ஒன்றியக் செயலாளர் பழனிச்சாமி, மேற்கு ஒன்றியக் செயலாளர் துரை தமிழரசு, கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் மற்றும் மூலனூர் பேரூர் செயலாளர் மக்கள் தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.