வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு
திருவெறும்பூர் |

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியா் மா. பிரதீப்குமாா், செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள், மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படும் காப்பறைகள், தோ்தல் பாா்வையாளா் அறை, தோ்தல் நடத்தும் அலுவலா் அறை, ஊடக மையம் உள்ளிட்ட வசதிகளை பாா்வையிட்டாா். பின்னா், ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளா்களின் முகவா்கள் வந்து செல்லும் வழிகள் குறித்து கேட்டறிந்து தேவையான வசதிகளை செய்துதர அறிவுறுத்தினாா். வழக்கமாக சவுக்கு மரங்களால் தடுப்புகள் ஏற்படுத்தப்படும். தேவையான இடங்களில் மட்டுமே கம்பிக் கூண்டுகள் அமைக்கப்படும். இந்த முறை அறைகளை முழுமையாக கம்பிக் கூண்டுகளால் அடைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நபா்களை தவிா்த்து வேறு யாரும் நுழைய இயலாது. மேலும், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிற்கவோ, அமரவோ வேண்டும். ஏனெனில், ஒருமுறை நுழைந்துவிட்டால் தடுப்பு கூண்டுகளை பூட்டி விடுவா். தேவையெனில் மட்டுமே திறக்கப்படும். வாக்கும் எண்ணும் மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா், போலீஸாா் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூடுதல் கண்காணிப்புடன் பணியாற்ற அறிவுறுத்தினாா்

வீடியோஸ்