
கிருஷ்ணகிரி: மாதம் ரூ.3000 வழங்கும் சூப்பர் திட்டம்
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான் தன் யோஜனா (PM-SYM) என்பது மத்திய அரசால் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் நோக்கம், வயதான காலத்தில் அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாகும். அமைப்புசாரா தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.55 செலுத்தி வந்தால் 60 வயது நிறைவடைந்த பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெற முடியும். இத்திட்டத்தில் முதலீடு செய்ய அருகிலுள்ள பொதுசேவை மையத்தை அணுகவும்.