மீன்பிடி தடைக்காலம் துவக்கம் கரையோரம் ஓய்வெடுக்கும் படகுகள்
உத்திரமேரூர் |

மீன்பிடி தடைக்காலம் துவக்கம் கரையோரம் ஓய்வெடுக்கும் படகுகள்

மீன்பிடி தடைக்காலம் துவங்கியுள்ளதால், கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், படகுகள் ஓய்வுகொடுக்க, 'டிராக்டர்' வாயிலாக படகுகளை மேட்டுப் பகுதிக்கு இழுத்து வந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுஉள்ளன. மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்குவது மீன்பிடி தொழில். அதற்கு, கடலில் மீன்வளம் அவசியம். இவ்வளத்தை பெருக்க கருதி, மத்திய அரசு, வங்கக் கடலில் ஏப்ரல் 15 - ஜூன் 15ம் தேதி வரை, மீன் பிடிக்க தடைவிதித்துஉள்ளது. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால், செங்கல்பட்டு மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மாமல்லபுரம், கோவளம், புதுப்பட்டினம், கடலுார், ஆலம்பரை உள்ளிட்ட பகுதிகளில், கரையோரம் இருந்த படகுகளை டிராக்டர் மூலம் இழுத்து, பாதுகாப்பாக மேட்டுப் பகுதியில் வைத்தனர். மேலும், மீன்பிடி வலைகள் வைக்க இடமில்லாத இடங்களில், கரையிலே வைத்து, வெயிலில் பாதிக்காமல் தவிர்க்க, அதை தென்னங்கீற்று உள்ளிட்டவற்றால் மூடி வைத்துஉள்ளனர்.

வீடியோஸ்