
காணும் பொங்கல் என்றால் என்ன?
தை மாதம் 3-ம் நாள் 'காணும் பொங்கல்' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர்கள், நண்பர்களைச் சென்று காணுதல் மற்றும் பெரியோர்களின் ஆசி பெறுதல் ஆகியவை அடங்கும். கிராமங்களில் பட்டிமன்றம், விளையாட்டுப் போட்டிகள், சாகச போட்டிகள், உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். தற்போது மக்கள் கடற்கரை, பூங்காக்கள் போன்ற இடங்களுக்குச் சென்று இந்த தினத்தைக் கொண்டாடுகின்றனர்.