Top 10 viral news 🔥


ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (ஜன.13) கைஷூ பகுதியில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 37 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் EMSC கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து, ஜப்பானின் தென் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.