
திருவள்ளூர்: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வரும் 29ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையில், பொதுவாக மாதத்தின் கடைசிப் பணி நாளன்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இம்மாதத்தின் கடைசி பணி நாளான 29ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் அன்று கடைகள் திறந்து செயல்படும். 30ஆம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு, 31ஆம் தேதி ரம்ஜான் விடுமுறை என்பதால் கடைகளுக்கு விடுமுறையாகும். இதனால் ரேஷன் பொருட்களை சனிக்கிழமை வரை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.