முசிறி |

பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள் கைது

கண்ணனூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கல்லூரி பேராசிரியர் மேடை அருகே நின்று கொண்டிருந்த மைக்ரோ பயாலஜி மூன்றாம் ஆண்டு படிக்கும் பவித்ரன் என்ற மாணவரை இருக்கையில் அமர கூறியுள்ளார். மாணவர் பவித்ரன் அங்கிருந்து வெளியே சென்றதாக தெரிகிறது. பணிகள் முடிந்து மாலை 4 மணியளவில் கல்லூரியில் இருந்து ஆசிரியர் முகிலன் வெளியே சென்ற போது மாணவர் பவித்ரன் மது போதையில் வாக்குவாதத்தில் Nஈடுபட்டுள்ளார். இதனால் ஆசிரியர் மாணவனின் கல்லூரி அடையாள அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர் பவித்ரன் இரவு 8 மணி அளவில் தனது சக நண்பர்களான ஜீவா, பிரதீஷ் உள்ளிட்ட நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதில் தீ வைத்து கல்லூரி வாசல் சுவரில் வீசி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் போலீசாரை உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் போலீஸ் தீவிர விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசியது பவித்ரன் (22), காளிபட்டி கபிலன், (22), பிரதீஷ்(21) ஜீவா (20)ஆகியோர் என்பது தெரிய வந்தது. நான்கு பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு
'எங்கள் பூரணம் அம்மா' - அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி!
Jan 26, 2024, 09:01 IST/

'எங்கள் பூரணம் அம்மா' - அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி!

Jan 26, 2024, 09:01 IST
அரசுப் பள்ளி கட்டுவதற்காக தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு, சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் பூரணம் அம்மாளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அன்பில் மகேஷ், 'கல்வி எனும் அறத்தின் வழியே ஒன்றிணைந்தோம். கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம். எங்கள் பூரணம் அம்மா' என குறிப்பிட்டுள்ளார்.