அமெரிக்க காட்டுத் தீ விபத்து.. பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு
அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக கொளுந்துவிட்டு எரிந்து வரும் காட்டுத் தீ விபத்தில் உடல் கருகி பலியானோரின் எண்ணிக்கை 24.ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாஸ்ஏஞ்செல்சில் பற்றி எரிந்து வரும் தீக்கு நேற்று வரை 16 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், தற்போது மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 16 பேரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.