திருப்பூர் - Tiruppur

காங்கேயம் |

38 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

வெள்ளகோவில் வேலப்பன் நாயக்கன் வலசு ஊராட்சி ராகுபையன்வலசு,  குருக்குபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான 14ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம்  வாங்கி உள்ளது.  நிலத்தில் துணை மின் நிலையம்  அமைக்கவும் கட்டுமான பணிகளும்  நடைபெறுகிறது கரூர் மாவட்டத்தில் நிறுவனத்துக்கு சொந்தமான பல காற்றாலைகளில்  கிடைக்கும் மின்சாரம் ராகுபையன் வலசு துணைமின் நிலையத்துக்கு கொண்டுவரப்பட உள்ளது.  20கிலோமீட்டர்தூரத்துக்கு உயர்மின் கோபுரம்,  மின் பாதை அமைத்து  மூலனூர் துரம்பாடிக்கு  கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு மின் கோபுரங்கள்,   உயர்மின் பாதைகள் பொதுச்சாலை வழியாக அமையும்  நிலையில் பல இடங்களில் விவசாய நிலங்களின் வழியாக அமைக்கப்பட உள்ளது.  ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி ஏதும் பெறாமலேயே  விதிமுறைகளை மீறி  துணை மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.  விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள்,  மின்பாதைகள் அமைத்தால் நிலத்தின் விலை மதிப்பு குறையும் நில உரிமை சிதறடிக்கப்படும்,  விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். விவசாயநிலங்கள் வழியாக மின் வழித்தடம் அமைப்பதை கைவிட வலியுறுத்தி வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் காத்திருப்பு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்திலும் கிராமங்களில் உள்ள வீடுகள் தோட்டங்களில் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

வீடியோஸ்