பொழுதுப்போக்கு - Entertainment

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் - ரஜினிகாந்த்

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் மயில்சாமி மாரடைப்பால் நேற்று திடீரென மரணம் அடைந்தார். நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். அவரை இளைஞனாக இருக்கும்போதே எனக்கு தெரியும். நேற்று நடந்த சிவன் கோவில் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பாலபிஷேகம் செய்வதை நான் பார்க்க வேண்டும் என்று மயில்சாமி, டிரம்ஸ் சிவமணியிடம் சொல்லியிருக்கிறார். கட்டாயம் சிவமணியிடம் இதைபற்றி பேசிவிட்டு மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் என்றார்.

ad