இந்திய அணிக்கு நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் சவால் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "பெங்களூரு மைதானத்தை விட புனே ஆடுகளம் வித்தியாசமாக இருக்கும். 66 பிட்ச்சில் பந்து கொஞ்சம் அதிகமாக சுழன்றால் எங்களிடமும் நான்கு ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். இந்திய அணிக்கு நாங்கள் கடும் போட்டியை கொடுப்போம். இந்தப் போட்டியிலும் நாங்கள் அசத்துவோம் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். புனே நகரில் நாளை (அக்.24) இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.