குன்னூர் |

வாகன ஓட்டிகளை துரத்திய காட்டு யானையால் பரபரப்பு

கூடலூர் எல்லையோர கிராமங்களுக்குள் நுழைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக முதுமலை வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாக்கமுலா பகுதியில் முகாமிட்டு வந்தது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. சில சமயங்களில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து நிற்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்த காட்டு யானை தொரப்பள்ளி பஜாருக்குள் நுழைந்தது. இதை சற்றும் எதிர்பாராத வாகன ஒட்டிகள், பொதுமக்கள் காட்டு யானையை கண்டு அச்சமடைந்தனர், மேலும் யானையும் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் நடந்து சென்றவாறு இருந்தது. பின்னர் திடீரென பிளிறியவாறு வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் துரத்த தொடங்கியது. இதனால் அனைவரும் பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினர். தொடர்ந்து காட்டு யானையும் அவர்களை துரத்தியவாறு ஓடியது. பின்னர் காட்டு யானை முதுமலை வனத்துக்குள் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோஸ்