

பீட்ரூட் விளைச்சல் குறைவு.. விவசாயிகள் ஏமாற்றம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை, கண்ணமநாயக்கனூர், உரல்பட்டி என பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பீட்ரூட் சாகுபடி செய்துள்ளனர். தற்போழுது வெயிலின் தாக்கத்தால் பீட்ரூட் மகசூலின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. ஏக்கருக்கு 14 டன் வரை கிடைத்து வந்த நிலையில் தற்போது பாதியாக குறைந்துவிட்டது. விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதால் போதிய விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோவுக்கு ரூ.30 வரை மட்டுமே கிடைக்கிறது. உற்பத்தி செலவு உள்ளிட்டவைக்கு கூட கட்டுப்படியாகவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.