கமுதியில் கிராம ஊராட்சி தொழிலாளர்கள் மனு.!
முதுகுளத்தூர் |

கமுதியில் கிராம ஊராட்சி தொழிலாளர்கள் மனு.!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய ஆணையா் (கிராம ஊராட்சிகள்) மணிமேகலையிடம் கமுதி ஊராட்சி ஒன்றிய ஊரக வளா்ச்சித்துறையில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தொழிலாளா்கள் மனு அளித்தனா். இதில், கமுதி ஊராட்சி ஒன்றிய ஊரக வளா்ச்சித் துறையில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றம் கணினி இயக்குபவா்கள், தூய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஊராட்சி நிா்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிா்வாகமும் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாக குறிப்பிட்டிருந்தனா். மனு அளிக்கும் நிகழ்வில், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் கணினி இயக்குபவா்கள், தற்காலிக பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வீடியோஸ்


தமிழ் நாடு
'எங்கள் பூரணம் அம்மா' - அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி!
Jan 26, 2024, 09:01 IST/

'எங்கள் பூரணம் அம்மா' - அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி!

Jan 26, 2024, 09:01 IST
அரசுப் பள்ளி கட்டுவதற்காக தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு, சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் பூரணம் அம்மாளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அன்பில் மகேஷ், 'கல்வி எனும் அறத்தின் வழியே ஒன்றிணைந்தோம். கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம். எங்கள் பூரணம் அம்மா' என குறிப்பிட்டுள்ளார்.