50 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்த நடிகை லட்சுமி மஞ்சு

67பார்த்தது
50 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்த நடிகை லட்சுமி மஞ்சு
தமிழில் ‘கடல்’, ‘இஞ்சி இடுப்பழகி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லட்சுமி மஞ்சு. இவர், தெலுங்கு நடிகராக இருக்கும் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. இவர் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். இதனிடையே சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தெலங்கானாவில் உள்ள 20 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, ஸ்மார்ட் கிளாஸ் ரூம் போன்ற வசதிகளை செய்து வருகிறார். இவர் ஏற்கனவே 30 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி