மக்களிடத்தில் அரசிற்கு உள்ள நற்பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். மதுபான முறைகேடு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில் பாலாஜி, "டெல்லியைப் போல மதுபான கொள்முதலில் தமிழ்நாட்டில் எந்த புதிய கொள்கை முடிவும் எடுக்கவில்லை. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருந்ததால் அமலாக்கத்துறை அவசர அவசரமாக அறிக்கை தயாரித்துள்ளது. அமலாக்கத்துறையின் வழக்குகள் சட்டரீதியாக எதிர்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.