திருப்பூர் எம். எஸ். நகர், ளர் ஏ. பி. முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது: -
மக்களிடம் மும்மொழிக்கொள்கையை கொண்டு சேர்க்கும் வகையில் தமிழகத்தில் 1 கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மும்மொழிக்கொள் கைக்கு பெரிய அளவில் ஆதரவை தந்து வருகிறார்கள். இருமொழியை அமல்படுத்துபவர்கள் முதலில் அவர்கள் வீட் டில் அதை கடைபிடிக்க வேண்டும். நூற்றுக்கணக்கான சி. பி. எஸ். இ. பள்ளிகளை தி. மு. க. வின் பினாமிகள் நடத்துகி றார்கள். அங்கு மும்மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. அவர்கள் குடும்பத்தினரின் பிள்ளைகள் மும்மொழி கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஏழை அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் மேம்படக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
தேர்தல் காலகட்டத்தில் மும்மொழிக்கொள்கையை கையில் எடுத்து இருக்கிறார்கள். இந்தி திணிப்பு என்று சொல்கிறார் கள். பிரதமர் மோடி தமிழை திணித்து வருகிறார். ஆனால் தி. மு. க. தலைவர்கள் தமிழை அழிக்க நினைக்கிறார்கள். தி. மு. க. வின் இரட்டை வேடத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.