மும்பையில் லாரி மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து வந்த அமராவதி எக்ஸ்பிரஸ், போட்வாட் ரயில் நிலையத்தில் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பூஸ்வால்-பந்தேரா சந்திப்பில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று, ரயில் பாதையைக் கடக்க முயன்றது. அப்போது, இந்த கோர விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.