இந்தியாவில் புதிய ரூ.100, ரூ.200 நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும் என RBI அண்மையில் தெரிவித்தது. இதனால் பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள RBI, புதிய ரூபாய் நோட்டு வடிவமைப்பில் எந்தவித மாற்றங்களும் இருக்காது. புதிய RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையொப்பத்துடன் ரூபாய் நோட்டுக்கள் வெளியாகும். பழைய ரூபாய் நோட்டுக்களும் வழக்கம்போல் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது.