ரூபாய் குறியீட்டை நீக்கி மத்திய அரசுக்கு எதிராக மிக தைரியமாக செயல்பட்டதற்கு வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கன்னட ரக்ஷண வேதிகே கட்சியின் தலைவர் நாராயண கவுடா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், "தொகுதி மறு சீரமைப்பு மூலமாக தென் மாநிலங்களை மரண குழியில் தள்ளப் பார்க்கிறது மத்திய அரசு. பெரியார் வழியில் திராவிட கொள்கைகளை தென் மாநில மொழி பேசுபவர்கள் கடைபிடித்து இந்தி திணிப்பை விரட்ட வேண்டும்" என்று கூறியுள்ளார்.