திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை மேற்கு ஒன்றியம் திமுக மற்றும் மாவட்ட இளைஞரணி சார்பில் தேவனூர் புதூரில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் மற்றும் தொகுதி மறுப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார் வரவேற்புரை ஏற்றினார். உடுமலை மேற்கு ஓன்றிய செயலாளர் செழியன் முன்னிலை வகித்தார். பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு பேசும் பொழுது. மத்திய அரசு தற்போது இந்தி திணைப்பை ஊக்கு விக்கும் விதமாக மும்மொழி கொள்கையை வேகமாக செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றனர் இதற்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் மத்திய அரசு தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகின்றது என பேசினார் மேலும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி சாமி சிறப்பு உரை யாற்றினர்.
மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நகர பேரூர் கழக செயலாளர்கள் உட்பட பலர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்