சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம்

50பார்த்தது
சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை வாசித்து வரும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார். மேலும், “பூங்காக்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி உள்ளிட்டவைகள் இடம்பெறும். அனைத்து வகுப்பு மக்களுக்கான வீட்டு வசதிகள் நிறைந்த பன்னடுக்கு கட்டடங்கள் கொண்டதாக இந்நகரம் இருக்கும். சென்னை மாநகரை இந்த புதிய நகரத்துடன் இணைத்திட உரிய சாலை வசதிகள் அமைக்கப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி