12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அக்கவுண்டன்சி தேர்வுகளில் கால்குலேட்டர் பயன்படுத்த சிபிஎஸ்இ-யின் பாடத்திட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் தந்ததும், இது அமலுக்கு வரும். தற்போது சிறப்பு கவனம் தேவைப்படும் மாணாக்கர்கள் மட்டும் கால்குலேட்டர் பயன்படுத்துகின்றனர். ஆனால், சிபிஎஸ்இயின் இந்த முடிவால் மாணவர்கள் அனைவரும் பயனடைவர் எனக் கூறப்படுகிறது.