காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்று நோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், “1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும். 14 வயதுடைய அனைத்து பெண்களுக்கும் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும்” என்றார்.