நெல்லை அருகே ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் காரணமாக நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள், வரும் 20.03.2025 முதல் 13.04.2025 வரை 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நெல்லை - திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூர் - நெல்லை இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது.