திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மோகனபிரியா சரவணன் பிறந்த நாளை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வினை திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மோகன பிரியா வழங்கி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் துர்கா ஈஸ்வர சாமி முன்னாள் வர்த்தக பிரிவு மாவட்டத் தலைவர் ஜெகநாதன் முன்னாள் வர்த்தக பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் குமரன் திலகராஜ் , வர்த்தக பிரிவு முன்னாள் மண்டல தலைவர் தனசேகரன் , முன்னாள் மாவட்ட பொதுசெயலாளர் வடுகநாதன், உடுமலை நகர பாஜக தலைவர் பாலகுரு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை முன்னாள் வர்த்தக பிரிவு மாவட்டச் செயலாளர் துர்கா ஈஸ்வர சாமி செய்திருந்தார்.