இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், `கைதி -2 ' படத்திற்குப் பிறகு ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு முழு திரைப்படம் எடுப்பேன். அப்போதுதான் `விக்ரம் -2' திரைப்படத்தில் இந்த யூனிவர்ஸ் முடிவு பெறும்' எனக் கூறியுள்ளார். இப்படியான லைன் அப் திட்டங்களை வைத்திருக்கும் அவருக்கு, நடிகர்களின் தேதி கிடைக்கவில்லை எனில், 'கூலி போன்ற ஸ்டாண்ட் அலோன் திரைப்படங்களைத் தொடர்ந்து எடுப்பேன்' எனவும் கூறியிருந்தார். இதுவரை, கைதி, விக்ரம், லியோ என 3 படங்கள் LCU-வில் இடம்பெற்றுள்ளன.