வேறு பெண்ணுடன் பேச்சு... புதுமாப்பிள்ளை தற்கொலை
திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த சுபாஷ் (27) என்பவருக்கும், குமாரி (25) என்ற பெண்ணிற்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இதனிடையில் சுபாஷ் வேறு பெண்ணுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தார். இது தொடர்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மனமுடைந்த சுபாஷ் நேற்று முன்தினம் (அக். 7) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.