கர்நாடகாவில், உயிரிழந்த தொழிலாளியின் சடலத்தை சாலையில் தரதரவென இழுத்து சென்ற வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலபுர்கி மாவட்டத்தில் செயல்படும் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்த பீகாரை சேர்ந்த சர்தன் சிங் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து நிர்வாகத்தின் பணியாளர்கள் அவர் கால்களை பிடித்து இழுத்து சென்றனர். இது குறித்து போலீஸ் விசாரிக்கிறது.