சேரன் இயக்கி நடித்த 'ஆட்டோகிராஃப்’ திரைப்படம், 21 ஆண்டுகள் கழித்து விரைவில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. இதுகுறித்து, AI மூலம் உருவாக்கப்பட்ட டிரைலரரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். 2004ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தின் வெற்றிக்குப் பரத்வாஜ் இசையும் முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்த படம் ரி-ரிலீஸ் செய்ய இருப்பதாக வெளியான செய்தி, ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.